ADDED : பிப் 10, 2025 01:03 AM

படப்பை:தாம்பரம் காவல் ஆணையரகம், மணிங்கலம் காவல் சரகம் சார்பில், பொதுமக்களுடன் நல்லுாறவை ஏற்படுத்தவும், சாலை விபத்தை தடுப்பதற்கும், காவல் துறையினர் மற்றும் மக்கள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம், படப்பை அருகே வஞ்சுவாஞ்சேரியில் நேற்று நடந்தது.
இதில், மணிமங்கலம் இன்ஸ்பெக்டர் அசோகன், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் உத்ராபதி மற்றும் போலீசார் பங்கேற்றனர்.
அப்போது, வஞ்சுவாஞ்சேரி பேருந்து நிறுத்தத்தில் போலீசார் காலை மாலை பணியில் ஈடுபட்டு, போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தெரிவித்தனர்.
மேலும், வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து, போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி சாலையில் செல்ல வேண்டும் என, போலீசார் சார்பில் ஆலோசனை வழக்கப்பட்டது. இதில், உள்ளாட்சி பிரதிநிதிகள், மக்கள் பலர் பங்கேற்றனர்.

