/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரூ.78 லட்சத்தில் சமுதாயக்கூடம் கட்ட அடிக்கல்
/
ரூ.78 லட்சத்தில் சமுதாயக்கூடம் கட்ட அடிக்கல்
ADDED : பிப் 25, 2025 09:53 PM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்டது புத்தகரம் கிராமம். புத்தகரம், மருதம், கிதிரிப்பேட்டை உள்ளிட்ட கிராமங்களைச்சேர்ந்தோர், திருமணம் உள்ளிட்ட குடும்பவிசேஷங்களை நடத்த வாலாஜாபாத் தனியார் மண்டபங்களை தேடி செல்கின்றனர்.
எனவே, தங்கள் பகுதியில் சமுதாயக்கூடம் ஏற்படுத்த வேண்டும் என, பல ஆண்டுகளாக அப்பகுதியினர் வலியுறுத்தி வந்தனர்.
அதன்படி, புத்தகரத்தில் சமுதாயக்கூடம் கட்ட தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக நிதியின் கீழ், 78 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், காஞ்சிபுரம் எம்.பி., செல்வம் ஆகியோர் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று, நேற்று பணியை துவக்கி வைத்தனர்.

