UPDATED : ஜூன் 11, 2026 04:06 PM
ADDED : ஜூன் 11, 2026 04:01 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த கடம்பர் கிராமத்தில் அமைந்துள்ள கடம்பநாதர் கோவிலில், வரும் 24ம் தேதி கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற உள்ளது.
கடம்பர் கிராமத்தில் உள்ள ஆவுடை நாயகி சமேத கடம்பநாதர் சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, வரும் ஜூன் 21ம் தேதி விநாயகர் வழிபாடு, மற்றும் தன பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது.
தொடர்ந்து, ஜூன் 22ம் தேதி யாகசாலை நிர்மாணமும், ஜூன் 23-ம் தேதி சிறப்பு வழிபாடுகளும் நடைபெற உள்ளன.
இதை தொடர்ந்து, ஜூன் 24ல், அதிகாலை முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளன. காலை 10:00 மணி அளவில் கோபுரம் மற்றும் விமானங்களுக்கு கும்பாபிஷேகம், மூலவர் மற்றும் திருச்சுற்று தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகமும் விமரிசையாக நடைபெற உள்ளது.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சரண்யா மற்றும் பரம்பரை அறங்காவலர் ராஜசேகரன் ஆகியோர் முன்னின்று செய்து வருகின்றனர்.
