/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மதுராந்தகம் இ - சேவை மைய பெண் பணியாளர் மீது தாக்குதல்
/
மதுராந்தகம் இ - சேவை மைய பெண் பணியாளர் மீது தாக்குதல்
மதுராந்தகம் இ - சேவை மைய பெண் பணியாளர் மீது தாக்குதல்
மதுராந்தகம் இ - சேவை மைய பெண் பணியாளர் மீது தாக்குதல்
UPDATED : மார் 22, 2024 12:40 PM
ADDED : மார் 22, 2024 12:40 AM
மதுராந்தகம்:மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில், அரசு இ- - சேவை மையம் இயங்கி வருகிறது. இங்கு, மதுராந்தகம் அடுத்த செங்குந்தர்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரேவதி, 36, என்பவர், கணினி இயக்குபவராக பணிபுரிகிறார்.
நேற்று முன்தினம், மதுராந்தகம் அடுத்த பாக்கம் பகுதியைச் சேர்ந்த பொற்செல்வன், 25, என்பவர், ஆண் குழந்தை இல்லை என சான்றிதழ் பெறுவதற்காக, விண்ணப்பம் செய்ய வட்டாட்சியர் அலுவலகம் வந்தார்.
அந்த நபர், பதிவு செய்யக் கோரிய சான்றிதழ் பெறுவதற்கு, ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க இ - சேவை மையத்திற்கு வந்தார். அப்போது, அதற்கு தேவையான ஆவணங்களான பெற்றோரின் சேர்ந்த புகைப்படம், முதல் குழந்தையின் பிறப்பு சான்றிதழ், கடைசி குழந்தையின் பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் குடும்ப கட்டுப்பாடு சான்றிதழ் ஆகியவற்றை, பொற்செல்வனிடம் ரேவதி கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பொற்செல்வன், ரேவதியிடம் மரியாதை குறைவாகவும், தரக்குறைவாகவும் பேசி, கழுத்தில் கையை வைத்து, கீழே தள்ளியுள்ளார்.
இது குறித்து, மதுராந்தகம் காவல் நிலையத்தில், நேற்று ரேவதி புகார் அளித்தார். அதன்ப்டி வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

