/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குடும்ப தகராறில் பஞ்சர் கடைக்காரர் தற்கொலை
/
குடும்ப தகராறில் பஞ்சர் கடைக்காரர் தற்கொலை
ADDED : மார் 21, 2024 10:43 AM
ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் அடுத்த, வல்லக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிற்றரசு, 44, பஞ்சர் கடை வைத்துள்ளார். இவரது மனைவி சசிகலா, 40. இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, சிற்றரசு மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால், மனைவி சசிகலா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால், ஆத்திரமடைந்த சிற்றரசு வீட்டிற்கு எதிரே உள்ளே பஞ்சர் கடையில் துாங்க சென்றார்.
மறுநாள் காலை 5:00 மணிக்கு சசிகலா கடைக்கு சென்று பார்த்த போது, சிற்றரசு கடையில் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது தெரிந்தது.
ஒரகடம் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தற்கொலை குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

