/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி
/
காஞ்சியில் எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி
ADDED : டிச 02, 2025 04:52 AM

காஞ்சிபுரம்.: காஞ்சிபுரம் கலெக்டர் வளாகத்தில், உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணியை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில், உலக எய்ட்ஸ் தினத்தை யொட்டி கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
அதை தொடர்ந்து கலெக்டர் கலைச்செல்வி, கையெழுத்து இயக்கத்தையும், எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணியையும் துவக்கி வைத்தார். எய்ட்சால் பாதிக்கப்பட்ட 50 பேருக்கு கலெக்டர் கலைச்செல்வி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பேரணியில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், சப் - கலெக்டர் ஆஷிக்அலி, காசநோய் பிரிவு துணை இயக்குநர் காளீஸ்வரி, மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர்.

