/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விடுமுறை தினங்களில் முடங்கும் பேருந்து சேவை
/
விடுமுறை தினங்களில் முடங்கும் பேருந்து சேவை
ADDED : டிச 07, 2025 05:46 AM
காஞ்சிபுரம்: விடுமுறை தினங்களில் அரசு பேருந்துகள் அதே வழிதடத்தில் இயக்க வேண்டும் என, காரணிமண்டபம் சுற்றியுள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்திரமேரூர் அடுத்த, காரணிமண்டபம் முதல், காஞ்சிபுரம் வரையில், தடம் எண்-34ஏ அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்த அரசு பேருந்து, களியாம்பூண்டி, மேல்பாக்கம், அனுமந்தண்டலம், இளநகர், பெருநகர், மாங்கல் கூட்டுசாலை வழியாக காஞ்சிபுரம் செல்கிறது. தினசரி ஆறு முறை காரணிமண்டபம் முதல் காஞ்சிபுரம் வரையில் இயக்கப்படுகிறது.
இந்த பேருந்து மூலமாக, அரசு பள்ளி மாணவ- - மாணவியர் மற்றும் 10க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது.
ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில், தடம் எண்-76சி என, பெயர் மாற்றி சிறப்பு பேருந்தாக இயக்கப்படுகிறது. இதனால், காரணிமண்டபம் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிரமத்தை சந்திக்க வேண்டி உள்ளது என, கிராம மக்கள் தெரிவித்தனர்.
எனவே, சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறையினர் விடுமுறை தினங்களிலும் அரசு பேருந்துகள் மாற்று வழித்தடத்தில் இயக்காமல் அதே வழித்தடத்தில் இயக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

