sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நவரை பருவத்தில் 68,000 ஏக்கர் சாகுபடி 80 நெல் கொள்முதல் நிலையம் அமைகிறது

/

நவரை பருவத்தில் 68,000 ஏக்கர் சாகுபடி 80 நெல் கொள்முதல் நிலையம் அமைகிறது

நவரை பருவத்தில் 68,000 ஏக்கர் சாகுபடி 80 நெல் கொள்முதல் நிலையம் அமைகிறது

நவரை பருவத்தில் 68,000 ஏக்கர் சாகுபடி 80 நெல் கொள்முதல் நிலையம் அமைகிறது


ADDED : மார் 14, 2024 10:29 PM

Google News

ADDED : மார் 14, 2024 10:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், நவரை பருவத்தில், 68,000 ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளதால், மாவட்டம் முழுதும் 80 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்தாண்டு, நவரை பருவத்தில் 62,615 ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்பட்டது.

இந்தாண்டு, டிசம்பரில் 24,480 ஏக்கர், ஜனவரியில் 37,758 ஏக்கர், பிப்ரவரியில் 6,000 ஏக்கர் என, 68,238 ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டிருப்பதாக வேளாண் துறை தெரிவிக்கிறது. இது கடந்தாண்டை காட்டிலும்,5,623 ஏக்கர் அதிகமாகும்.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் இரண்டாவது வாரத்தில் நவரை பருவ அறுவடை துவங்கும்.

அந்த வகையில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அறுவடை துவங்கியுள்ளதால், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில், விரைந்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை துவக்க வேண்டும் என, விவசாயிகள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

உத்திரமேரூர் சுற்றியகிராமங்களில், இப்போதே அறுவடை துவங்கி விட்டதால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தங்களது நெல் மூட்டைகளை விற்பனை செய்ய விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என, அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்துள்ளனர்.

கடந்தாண்டு நவரை பருவத்தில், 130 இடங்களில், நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. அதிகபட்சமாக, உத்திரமேரூர் ஒன்றியத்தில், 50 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டன.

இப்போது, முதற்கட்டமாக 12 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட இருப்பதாகவும், சமீபத்தில் மேல்பெரமநல்லுாரில் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கூரம், தாமல், விச்சாந்தாங்கல், அவலுார், வேடல், நெய்க்குப்பம், குண்ணவாக்கம், மாம்புதுார், சிறுமயிலுார், ஒழுகரை, மருதம் ஆகிய இடங்களில் இந்த வாரம் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வாணிபக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ''மாவட்டம் முழுதும், விவசாயிகள் தேவைக்கு ஏற்ப, படிப்படியாக கொள்முதல் நிலையம் திறக்கப்படும்.

''இந்தாண்டு, 80 இடங்களில் திறக்க முடிவு செய்துள்ளோம். மேலும் தேவைப்பட்டால் திறக்கப்படும். முதற்கட்டமாக, இந்த வாரம், 12 இடங்களில் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும்,'' என்றார்.

வேளாண் துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ''கடந்தாண்டு போல, நெல் கொள்முதல் நிலையங்களில் பணம் வசூலிப்பது போன்ற புகார்கள் வரக்கூடாது என கலெக்டர் எச்சரித்துள்ளார். மேலும், கூலி ஆட்களின் வங்கி கணக்குகளில் அவர்களுக்கான கூலியை செலுத்த கூறியுள்ளார். புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

கூலி ஆட்கள், நெல் துார்த்தும் இயந்திரம் உடனடியாக வழங்க வேண்டும். அரசியல்வாதிகள் தலையீடு இருக்கக்கூடாது. கூடுதல் பணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். நெற்களம் சிமென்ட் களமாக இருக்க வேண்டும். கொள்முதல் நிலையத்துக்கு, மின் இணைப்பு வழங்கி பிரச்னையின்றி நடத்த வேண்டும்.

- கே.நேரு,

மாவட்ட செயலர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.

விலை ஏற்றம்!


விவசாயிகள் வழங்கும் சன்ன ரகத்திற்கு ஒரு குவின்டாலுக்கு, 2,160 ரூபாயும், பொது ரகத்திற்கு ஒரு குவின்டாலுக்கு 2,115 ரூபாயும் கடந்தாண்டு வழங்கப்பட்டது. இந்தாண்டு, சன்ன ரகத்திற்கு 2,310 ரூபாயும், பொது ரகத்திற்கு, 2,265 ரூபாயும் உயர்த்தி வழங்கப்பட உள்ளது. கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.








      Dinamalar
      Follow us