/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தொழிற்சாலையில் மயங்கி விழுந்த ஊழியர் உயிரிழப்பு
/
தொழிற்சாலையில் மயங்கி விழுந்த ஊழியர் உயிரிழப்பு
ADDED : நவ 12, 2025 10:44 PM
உத்திரமேரூர்: குண்ணவாக்கத்தில், தனியார் தொழிற்சாலையில் ஊழியர் ஒருவர் மயங்கி விழுந்து, நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மா வட்டம், கோதண்டவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார், 38; இவருக்கு பொன்னரசி, 36 ; என்கிற மனைவியும், டேவிட்சன், 3 ; கேத்ரீன், 4 ; என்கிற இரு குழந்தைகள் உள்ளனர்.
இவர், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த, குண்ணவாக்கம் கிராமத்தில், தனியார் கெமிக்கல் தொழிற்சாலையில், 12 ஆண்டுகளாக 'கெமிஸ்ட்'ஆக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு, சந்தோஷ்குமார் வழக்கம்போல் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றார். பின், மதியம் 12:30 மணிக்கு, உணவு இடைவேளையின்போது சக ஊழியர்களிடம், அமர்ந்து பேசி கொண்டிருந்தார்.
அப்போது, அவர் மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை, உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார்.
இதுகுறித்து, உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

