/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோரம் பள்ளம் சீரமைக்க வலியுறுத்தல்
/
சாலையோரம் பள்ளம் சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : நவ 14, 2025 10:45 PM

கோனேரிகுப்பம்: கோனேரிகுப்பம் மூவேந்தர் நகர் செல்லும் சாலையோரம் மண் அரிப்பால் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்
காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சி, இயற்கை உரம் தயாரிக்கும் கூடம் அமைந்துள்ள பகுதியில் இருந்து மூவேந்தர் நகர் செல்லும் பிரதான சாலை உள்ளது.
இச்சாலையில் உள்ள வளைவு பகுதியில் மண் அரிப்பால் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால், இரவு நேரத்தில் மின்விளக்கு வெளிச்சம் இல்லாத அப்பகுதியில், வாகன ஓட்டிகள் சாலை வளைவில் திரும்பும்போதுநிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

