/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திருமாகறலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா
/
திருமாகறலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா
திருமாகறலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா
திருமாகறலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா
ADDED : டிச 03, 2025 01:03 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த மாகறல் திருமாகறலீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேக முதலாம் ஆண்டு நிறைவு விழாவை யொட்டி, நேற்று, நவ கலச யாகம் மற்றும் 108 சங்காபிஷேகம் நடந்தது.
மாகறல் கிராமத்தில் திருமாகறலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்த ஆண்டு டிச.,2ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் நடந்து நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி, கும்பாபிஷேகம் முதலாம் ஆண்டு நிறைவு நேற்று நடந்தது.
கோவில் வளாகத்தில், நவகலச யாகம் மற்றும் 108 சங்காபிஷேகம் நடந்தது. சிறப்பு யாகம் நடத்தி மூலவர் திருமாகறலீஸ்வரர் மற்றும் திருப்புவன நாயகிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை நடந்தது.