/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரயில்வே மேம்பால அணுகு சாலையில் வேகத்தடை இல்லாததால் விபத்து அபாயம்
/
ரயில்வே மேம்பால அணுகு சாலையில் வேகத்தடை இல்லாததால் விபத்து அபாயம்
ரயில்வே மேம்பால அணுகு சாலையில் வேகத்தடை இல்லாததால் விபத்து அபாயம்
ரயில்வே மேம்பால அணுகு சாலையில் வேகத்தடை இல்லாததால் விபத்து அபாயம்
ADDED : டிச 09, 2025 06:39 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள மேம்பால அணுகு சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என, இருசக்கர வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம், பொன்னேரிக்கரை, புதிய ரயில் நிலையம், அருகில் உள்ள ரயில்வே மேம் பாலம் வழியாக சுங்குவார் சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி, சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, பொன்னேரிக்கரையில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி வரும் வாகனங்கள், புதிய மேம்பாலத்தை கடந்து, புதிய ரயில் நிலையம் செல்லும் சாலையில் வேகமாக வருகின்றன.
இதனால், ஜவஹர்லால் நேரு சாலையில் இருந்து, காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்திற்கு செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே, விபத்தை தடுக்கும் வகையில், புதிய ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலை அருகில் உள்ள மேம் பாலம் அணுகு சாலை யில், வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இரு சக்கர வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.