/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆன்லைன் வழக்கு சேவையை எதிர்த்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
/
ஆன்லைன் வழக்கு சேவையை எதிர்த்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
ஆன்லைன் வழக்கு சேவையை எதிர்த்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
ஆன்லைன் வழக்கு சேவையை எதிர்த்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 09, 2025 06:39 AM

உத்திரமேரூர்: இணையதளம் வாயிலாக வழக்குகள் தொடுக்கும் முறையை திரும்ப வலியுறுத்தி, உத்திரமேரூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
நீதிமன்றங்களில் வழக்குகளை கையாள இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு நடைமுறைக்கு வந்து உள்ளது.
இதனால், சட்ட சேவைகள் வழங்குவதில் சிக்கல் ஏற்படக்கூடும் எனவும், வாடிக்கையாளர்களை நேரடியாக அனுக முடியாமல் ஒளிமறைவு ஏற்படுவதால் வெளிப்படை தன்மை இருக்காது எனவும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக உத்திரமேரூர் உரிமையியில் மற்றும் குற்றவியில் நீதிமன்ற வளாகத்தில், உத்திரமேரூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நேற்று, நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆன்லைன் வழக்கு சேவை முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதை திரும்ப கோரியும் கோஷமிட்டனர்.
உத்திரமேரூர் வழக்கறி ஞர்கள் சங்க தலைவர் அன்பழகன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

