/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தடுப்பின்றி செட்டியார்பேட்டை குளம் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
தடுப்பின்றி செட்டியார்பேட்டை குளம் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
தடுப்பின்றி செட்டியார்பேட்டை குளம் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
தடுப்பின்றி செட்டியார்பேட்டை குளம் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : டிச 09, 2025 06:34 AM

காஞ்சிபுரம்: தடுப்பின்றி இருக்கும் செட்டியார்பேட்டை குளக்கரை பகுதியை, வாகன ஓட்டிகள் ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர்.
சென்னை - பெங்களூரு நான்குவழி தேசிய நெடுஞ்சாலையை, ஆறுவழி சாலையாக விரிவு படுத்தும் பணி நடந்து வருகிறது.
இதற்கு, 654 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, மூன்று பிரிவுகளாக ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
இதில், காரப்பேட்டை, ஏனாத்துார், ராஜகுளம், சின்னையன்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் கட்டி முடிக்கப் பட்டுள்ளன. மேம்பாலத்தின் இருபுறமும், ஏற்ற, இறக்கத்தில் மண் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
மாற்றுப்பாதை ஓரம் செல்லும் வாகனங்கள் அடிக்கடி சிரமத்தை சந்திக்க வேண்டி உள்ளது.
குறிப்பாக, சென்னையில் இருந்து, காஞ்சிபுரம் நோக்கி செல்லும் வாகனங்கள் காரப்பேட்டை அடுத்த, செட்டியார்பேட்டை பகுதியை கடந்து செல்ல வேண்டும். இந்த செட்டியார்பேட்டை கிராம நிர்வாக அலுவலக கட்டடம் அருகே, தேசிய நெடுஞ்சாலையோரம் ஆபத்தான குளம் உள்ளது.
இந்த குளத்தை ஒட்டி செல்லும் வாகனங்கள், சாலையோர தடுப்பு இல்லாததால், நிலை தடுமாறி குளத்தில் கவிழும் நிலை உள்ளது.
எனவே, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் ஆபத்தாக இருக்கும் குளத்திற்கு, தடுப்பு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

