/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வேகத்தடையின்றி பள்ளூர் - சோகண்டி சாலை
/
வேகத்தடையின்றி பள்ளூர் - சோகண்டி சாலை
ADDED : டிச 07, 2025 05:54 AM

காஞ்சிபுரம்: வேகத்தடை இல்லாததால், பள்ளூர் - சோகண்டி சாலையில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
பள்ளூர் - சோகண்டி வரையில், மாநில நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில், 24 கி.மீ., துாரம் ஒரு வழி சாலை இருந்தது.
இச்சாலையில், வாகனப் போக்குவரத்து அதிகரித்து இருப்பதால், மேம்படுத்தப்பட்ட இருவழி சாலையாக, வி ரிவுப்படுத்தும் பணி, 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கியது. ஏழு மீட்டர் சாலையில் இருந்து, 10.5 மீட்டராக மேம்படுத்தப்பட்ட இருவழி சாலைக்கு, 44 கோடி ரூபாய் செலவில், சாலை விரிவுபடுத்தும் பணி நிறைவு பெற்று, வாகன போக்குவரத்து பயன்பாட்டில் உள்ளது.
இந்த சாலையோர கிராமங்களின் பெயர்கள் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில், இரவில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ஒளிரும் எச்சரிக்கை பலகைகளை பொருத்தினர்.
இருப்பினும், பள்ளி, கிராம முக்கிய சந்திப்பு சாலைகளில் வேகத்தடைகள் ஏதுவும் அமைக்கவில்லை என, கிராம மக்கள் தெரிவித்தனர். குறிப்பாக, ஏகனாபுரம், பரந்துார், கொட்டவாக்கம், மூலப்பட்டு, அருந்ததியர்பாளையம், கம்மவார்பாளையம் ஆகிய கிராமங்களில் வேக தடைகள் ஏதுவும் அமைக்கவில்லை.
இதனால், மேற்கண்ட கிராமங்களில் வாகன வி பத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, பள்ளூர் - சோகண்டி சாலையோரம் பள்ளி கள் மற்றும் சந்திப்பு சாலைக ளில் வேகத்தடை அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

