/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
4 அடி உயரத்தில் மின்மாற்றி அச்சத்தில் இரும்பேடு மக்கள்
/
4 அடி உயரத்தில் மின்மாற்றி அச்சத்தில் இரும்பேடு மக்கள்
4 அடி உயரத்தில் மின்மாற்றி அச்சத்தில் இரும்பேடு மக்கள்
4 அடி உயரத்தில் மின்மாற்றி அச்சத்தில் இரும்பேடு மக்கள்
ADDED : டிச 02, 2025 04:58 AM

ஸ்ரீபெரும்புதுார்: இரும்பேடு செல்லும் சாலையோரம், 4 அடியில் வைக்கப்பட்டுள்ள மின்மாற்றியால், மின் விபத்து ஏற்படும் அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், வெங்காடு ஊராட்சிக்குட்பட்ட இரும்பேடு கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்கள் பல்வேறு தேவைக்காக, வெங்காடு செல்லும் சாலை வழியே சென்று வருகின்றனர்.
இந்த சாலையில், தனியார் நிறுவன பயன்பாட்டிற்காக, சமீபத்தில், மின் வாரிய துறை சார்பில், பிரதான சாலையோரம் மின்மாற்றி வைக்கப்பட்டது. 100 கே.வி.ஏ., திறன் கொண்ட இந்த மின்மாற்றி, எந்தவித எச்சரிக்கையும் இன்றி, உயரம் குறைவாக 4 அடியில் உள்ளது.
மின்வாரிய துறையின் அலட்சியத்தால், அவ் வழியாக பள்ளிக்கு நடந்து செல்லும் மாணவ - மாணவியர், எதிர்பாராதவிதமாக மின்மாற்றியின் அருகே சென்றால், உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன், மின் மாற்றியின் உயரத்தை அதிகரித்து, பாதுகாப்பு வேலி அமைத்து, எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

