/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மதுாரில் வடிகால்வாய் இல்லாததால் சாலையில் தேங்கும் மழைநீர்
/
மதுாரில் வடிகால்வாய் இல்லாததால் சாலையில் தேங்கும் மழைநீர்
மதுாரில் வடிகால்வாய் இல்லாததால் சாலையில் தேங்கும் மழைநீர்
மதுாரில் வடிகால்வாய் இல்லாததால் சாலையில் தேங்கும் மழைநீர்
ADDED : டிச 07, 2025 05:50 AM

மதுார்: மதுாரில் வடிகால்வாய் இல்லாததால், மழைநீர் வடியாமல் சாலையில் தேங்குவதால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது மதுார் கிராமம். இக்கிராமத்தில் பிரதான சாலையை ஒட்டி உள்ள கெங்கையம்மன் கோவில் தெரு மற்றும் குருப்ஹவுஸ் தெருக்கள் தாழ்வானதாக உள்ளது.
இந்த தெருவில் வடிகால்வாய் இல்லாததால், மழை நேரங்களில் தண்ணீர் வெளியேற வசதி இல்லாமல், தேங்குவது வழக்கமாக உள் ளது.
இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழைக்கு அத்தெருக்களில் மழைநீர் புகுந்து இதுவரை வடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால், அத்தெரு வழியாக பிரதான சாலைக்கு நடந்து செல்லும் பள்ளி மாணவ - மாணவியர் மற்றும் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
மேலும், இருசக்கர வாகனங்களில் செல்வோர் வாகனங்களை இயக்குவதில் சிரமத்திற்குள்ளாகின்றனர். மழைநீர் தேக்கத்தால் கொசு உற்பத்தி மற்றும் தொற்று ஏற்படக்கூடும் என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
எனவே, மதுார் தெருக்களில் மழைநீர் தேங்காமல் தவிர்க்கும் வகையில் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.
தற்போது பெய்யும் மழைக்கு உடனுக்குடன் தெருவில் தேங்கும் மழைநீரை அகற்ற ஊராட்சி நிர்வாகம் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

