/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலை மீடியன் சேதம்: வாகன ஓட்டிகள் அச்சம்
/
சாலை மீடியன் சேதம்: வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : ஜன 30, 2025 11:42 PM

காஞ்சிபுரம், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில், தங்க நாற்கர சாலை உள்ளது. இந்த நான்கு வழிச்சாலையை, 654 கோடி ரூபாய் செலவில், ஆறு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.
இதில், பொன்னேரிக்கரை கூட்டுச் சாலையில், மேம்பாலம் கட்டுமான பணிக்கு, சர்வீஸ் சாலை உருவாக்கப்பட்டு, வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
பொன்னேரிக்கரையில் உள்ள மீடியனில் வாகனம் மோதியதில்,மீடியன் சேதமடைந்துள்ளது. இதில், கம்பிகள் நீட்டிக் கொண்டிருப்பதால், வாகன ஓட்டிகளுக்கு, ஆபத்து ஏற்படுத்தும் விதமாக அச்சுறுத்தி வருகிறது. எனவே, சேதமடைந்த மீடியனைசீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

