/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திருவள்ளூர் சாலை சீரமைப்பு வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
/
திருவள்ளூர் சாலை சீரமைப்பு வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
திருவள்ளூர் சாலை சீரமைப்பு வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
திருவள்ளூர் சாலை சீரமைப்பு வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
ADDED : பிப் 11, 2025 12:51 AM

ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் -- திருவள்ளூர் நெடுஞ்சாலையில் நாள்தோறும் 30,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை வழியே, கிளாய், செங்காடு, வடமங்கலம், வயலுார், தொடுகாடு, மண்ணுார், வளர்புரம் உள்ளிட்ட கிராமத்தினர் திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதுார் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுாரை சுற்றியுள்ள சிப்காட் தொழில் பூங்காவில் இயங்கிவரும் ஏராளமான தொழிற்சாலைகளுக்கு செல்லும் ஊழியர்களை ஏற்றி செல்லும் தனியார் பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன.
கடந்தாண்டு அக்., மாதம் பெய்த கனமழையில் சாலை முற்றிலும் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியதால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிஅடைந்து வந்தனர்.
மேலும், காலை, மாலை பீக்ஹவர் நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. அதே போல், தாந்தோன்றி அம்மன் கோவில் ஆர்ச் அருகே, சாலை நடுவே பாதாள சாக்கடை 'மேன்ஹோல்' உடைந்து சேதமடைந்ததால், கார் மற்றும் இருக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கி வந்தன.
சேதமான சாலை மற்றும் மேன்ஹோல் மூடியை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, புதிய மேன்ஹோல் மூடியை அமைத்து, குண்டும் குழியுமான சாலையை தார் ஊற்றி நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைத்தனர்.

