/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஏரிவாய் சமுதாயக்கூடத்தில் பயன்பாடின்றி கழிப்பறை
/
ஏரிவாய் சமுதாயக்கூடத்தில் பயன்பாடின்றி கழிப்பறை
ADDED : டிச 09, 2025 06:38 AM

வாலாஜாபாத்: ஏரிவாய் சமுதாயக் கூடத்திற்கான கழிப்பறை கட்டடம் முறையான பராமரிப்பின்மையால் பயன்பாடு இல்லாமல் கைவிடப்பட்டுள்ளது.
வாலாஜாபாத் ஒன்றியம், முத்தியால்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்டது ஏரிவாய் கிராமம். இக்கிராமத்தில், 2008ல், உத்திரமேரூர் சட்டசபை தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் சமுதாயக் கூடம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
முத்தியால்பேட்டை, ஏரிவாய், படப்படம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தோர் தங்கள் குடும்ப நிகழ்ச்சிகளை இந்த சமுதாயக்கூடத்தில் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த சமுதாயகூடத்திற்கென ஏற்படுத்தப் பட்டிருந்த கழிப்பறை கட்டடம் மிகவும் பழுதடைந்து கைவிடப் பட்டதாக உள்ளது.
இதனால், தற்போது இப்பகுதி சமுதாயகூடத்தில் நிகழ்ச்சிகள் மேற்கொள்ளும் போது, அதில் பங்கேற்போர் அவசர நேரங்களில் இயற்கை உபாதைக்கு ஒதுங்க முடியாத நிலை இருந்து வருகிறது.
எனவே, ஏரிவாய் கிராமத்தில் உள்ள சமுதாயகூடத்திற்கு கழிப்பறை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, அப் பகுதி ஊராட்சி தலைவர் அன்பழகன் கூறியதாவது:
ஏரிவாய் சமுதாயகூடத்திற்கென ஏற்படுத்தப்பட்ட கழிப்பறை கட்டடம் மற்றும் சமையல் கூடம் பழுதடைந்துள்ளது. இதற்கான புதியதான கட்டடங்கள் அமைப்பதற்கான திட்டம் உள்ளது. விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

