/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
1,327 பயனாளிகளுக்கு ரூ.22.86 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
/
1,327 பயனாளிகளுக்கு ரூ.22.86 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
1,327 பயனாளிகளுக்கு ரூ.22.86 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
1,327 பயனாளிகளுக்கு ரூ.22.86 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ADDED : டிச 07, 2025 05:52 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், மகளிர் திட்டம், வருவாய்த்துறை, கூட்டுறவு என பல்வேறு துறைகளின் கீழ், 1,327 பயனாளிளுக்கு, 22.86 கோடி ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவிகளை, கைத்தறி துறை அமைச்சர் கா ந்தி நேற்று வழங்கினார்.
அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நுாற்றாண்டு நுாலகம் அரங்கில், அரசு நிகழ்ச்சியில் முதல்வரின் தாயுமானவர் திட்டம், கல்வி, சுயதொழில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியை, காணொலி வாயிலாக காஞ்சிபுரத்தில் திரையிடப்பட்டதை, காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், கைத்தறி துறை அமைச்சர் காந்தி, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில்,மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 60 பயனாளிகளுக்கு 67.17 லட்சம் ரூபாய் மதிப்பிலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 309 பயனாளிகளுக்கு 83,000 ரூபாய் மதிப்பிலும், தாட்கோ சார்பில் 272 பயனாளிகளுக்கு 2 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பிலும், நலத்திட்ட உதவிகளை கைத்தறி துறை அமைச்சர் காந்தி நேற்று வழங்கினார்.
மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 534 பயனாளிகளுக்கு 14 கோடியே 97 லட்ச ம் ரூபாய் மதிப்பிலும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் 45 பயனாளிகளுக்கு 2 28 லட்சம் மதிப்பிலும் உட்பட, மொத்தம் 1,327 பயனாளி களுக்கு 22.86 கோடி மதி ப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கைத்தறி துறை அமைச்சர் காந்தி நேற்று வழங்கினார்.
இந்நிகழ்வில், காஞ்சிபுரம் தி.மு.க.,- - எம்.பி., செல்வம், தி.மு.க.,- - எம்.எல்.ஏ.,க்கள் உத்திரமேரூர் சுந்தர், காஞ்சிபுரம் எழிலரசன் மாவட்ட வருவாய் முருகேசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி, காஞ்சிபுரம் சப் - கலெக்டர் ஆஷிக்அலி, மகளிர் திட்ட இயக்குநர் பிச்சாண்டி, காஞ்சிபுரம் ஒன்றிய குழுத் தலைவர் மலர்க்கொடி உட்பட பலர் பங்கேற்றனர்.

