/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திருவங்கரணை காலனியில் ரேஷன் கடை அமைக்கப்படுமா?
/
திருவங்கரணை காலனியில் ரேஷன் கடை அமைக்கப்படுமா?
ADDED : டிச 02, 2025 04:48 AM
வாலாஜாபாத்: திருவங்கரணை கிராம காலனி பகுதியில் புதிய கட்டடத்துடன்கூடிய ரேஷன் கடை அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவங்கரணை கிராமத்தில், காலனி குடியிருப்பு வாசிகள் ஒன்றரை கி.மீ., துாரத்திற்கு நடந்து சென்று ரேஷன் கடையில் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் பெறும் நிலை பல ஆண்டுகளாக இருந்தது.
அதையடுத்து காலனி மக்கள் கோரிக்கையை ஏற்று, குடியிருப்பு பகுதி யில் வாடகை கட்டடம் ஒன்றில் சில மாதங்களாக ரேஷன் கடை செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், ரேஷன் கடை செயல்படும் கட்டடத்தின் வாடகைக்கான கால அவகாசம் தற்போது முடிவுற்ற நிலையில், வாடகைக்கு வேறு இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், மீண்டும் ஒன்றரை கி.மீ., துாரத்தில் உள்ள அப்பகுதிக்கு சென்று ரேஷன் பொருட்கள் பெற வேண்டிய நிலை ஏற்பட் டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

