கொடைக்கானல் சுற்றுலாவில் 8 மாணவிகளுக்கு ‘தொல்லை’: ஆசிரியர் போலீசில் சரண்
கொடைக்கானல் சுற்றுலாவில் 8 மாணவிகளுக்கு ‘தொல்லை’: ஆசிரியர் போலீசில் சரண்
UPDATED : நவ 05, 2026 11:59 PM
ADDED : நவ 04, 2026 08:30 PM
நாகர்கோவில்:
கேரளாவில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த போது 8 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியர் போலீசில் சரணடைந்தார்.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் குற்றியாடி பகுதியைச் சேர்ந்தவர் சாலித் 43. உயர்நிலைப்பள்ளி ஆசிரியர். அவர் வேலை பார்க்கும் பள்ளியிலிருந்து மாணவ,- மாணவிகள் 160 பேர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர். மாணவ,- மாணவிகள் தனித்தனி பஸ்களில் சென்றனர். இதில் மாணவிகள் பஸ்சில் சாலித் பயணம் செய்தார். பயணத்தின் போது அவர் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததார். சுற்றுலா முடிந்து பள்ளிக்கு திரும்பியதும் 10-ம் வகுப்பு மாணவிகள் இதனை தலைமை ஆசிரியர் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அவர் ஏலத்துார் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில் 8 மாணவிகள் சாலித் மீது புகார் கூறினர். சாலித் மீது எட்டு தனித்தனி வழக்குகள் பதிவு செய்து விசாரணை தொடங்கியது. தலைமறைவான சாலித் கேரள உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து சாலித் ஏலத்துார் போலீசில் சரணடைந்தார். அவர் கைது செய்யப்பட்டார்.
