/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் பல்வேறு உபகரணங்கள் வழங்கல்
/
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் பல்வேறு உபகரணங்கள் வழங்கல்
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் பல்வேறு உபகரணங்கள் வழங்கல்
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் பல்வேறு உபகரணங்கள் வழங்கல்
ADDED : ஜன 31, 2025 01:22 AM
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் பல்வேறு உபகரணங்கள் வழங்கல்
குளித்தலை: குளித்தலை அடுத்த கடவூர், தரகம்பட்டி அரசு சமுதாய கூடத் தில், கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடந்தது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். கரூர் எம்.பி., ஜோதிமணி, முகாமை தொடங்கி வைத்து, ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து, முகாமில் அமைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான வழிகாட்டு மையங்கள், உபகரணங்கள், அவர்களுக்கான ஆலோசனை மையம், பதிவு மையம் உள்பட பல்வேறு
பகுதிகளில் ஆய்வு செய்து கேட்டறிந்தார்.மேலும், மாற்றுத்திறனாளி களுக்கான அரசு திட்டம், வங்கி கடன் வசதி, அடையாள அட்டை, பெட்ரோல் மோட்டார் சைக்கிள், ஆவின்பால் விற்பனைக்கான கடன் வசதி பெற மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தை தொடர்பு கொள்வது குறித்து எடுத்துக்கூறி, திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொண்டார்.
அதை தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான முடநீக்கு சாதனம், சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், பிரெய்லி வாட்ச், ஒளிரும் மடக்கு ஊன்று கோல், செயற்கை அவயம், சக்கர நாற்காலி, ரோலேட்டர், பிரெய்லி கிட், காதொலி கருவி ஆகிய உபகரணங்கள் வழங்கப்பட்டன. மேலும், புதிய அடையாள அட்டை பதிவு செய்தல், தேசிய அடையாள அட்டை புதுப்பித்தல், யு.டி.ஐ.டி., கார்டு பதிவு செய்தல், முதல்வரின் காப்பீடு திட்டத்தில் அறுவை சிகிச்சை பெறுவது, மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளி இயக்கம் மூலமாக அளிக்கப்படும்
உதவிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.