/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சேலம்-கரூர் பயணிகள் ரயில்திருச்சி வரை 3 மாதத்துக்கு நீட்டிப்பு
/
சேலம்-கரூர் பயணிகள் ரயில்திருச்சி வரை 3 மாதத்துக்கு நீட்டிப்பு
சேலம்-கரூர் பயணிகள் ரயில்திருச்சி வரை 3 மாதத்துக்கு நீட்டிப்பு
சேலம்-கரூர் பயணிகள் ரயில்திருச்சி வரை 3 மாதத்துக்கு நீட்டிப்பு
ADDED : ஜன 11, 2025 01:37 AM
சேலம்-கரூர் பயணிகள் ரயில்திருச்சி வரை 3 மாதத்துக்கு நீட்டிப்பு
கரூர்,:சேலம்-கரூர் பயணிகள் ரயில், திருச்சி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.சேலம்-கரூர் இடையே பயணிகள் டெமு ரயில் கடந்த, 2013 முதல் காலை மற்றும் மாலை என இரண்டு முறை (ஞாயிற்று கிழமை தவிர) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை பொங்கல் விழா மற்றும் கோடை விடுமுறையையொட்டி, திருச்சி வரை நீட்டிக்க வேண்டும் என, நமது நாளிதழில் சமீபத்தில் செய்தி வெளியானது.
இந்நிலையில், சேலம்-கரூர் பயணிகள் ரயில், கழிப்பிட வசதியுடன் கடந்த, 1 முதல் வரும் மார்ச், 31 வரை திருச்சி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சேலம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து நாள்தோறும் அதிகாலை, 5:20 மணிக்கு புறப்படும் பயணிகள் விரைவு ரயில், (ஞாயிறு கிழமை தவிர) கரூருக்கு காலை, 7:15 மணிக்கு வந்து சேரும்.
பிறகு கரூரில் இருந்து காலை, 7:20 மணிக்கு புறப்பட்டு, திருச்சிக்கு காலை, 9:35 மணிக்கு சென்று சேரும். அதேபோல், மறுமார்க்கத் தில் திருச்சியில் இருந்து அதிகாலை, 5:25 மணிக்கு புறப்படும் பயணிகள் விரைவு ரயில், கரூருக்கு காலை, 7:20 மணிக்கு வரும். பிறகு, கரூரில் காலை, 7:30 மணிக்கு புறப்பட்டு, சேலத்துக்கு காலை, 9:45 மணிக்கு சென்று சேரும்.
அதேபோல், சேலம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து மாலை, 6:00 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில், இரவு, 7:45 மணிக்கு கரூர் வந்து சேரும். பிறகு கரூரில் இருந்து இரவு, 8:05 மணிக்கு புறப்பட்டு, திருச்சிக்கு இரவு, 9:40 மணிக்கு சென்று சேரும். இத்தகவலை திருச்சி ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.