/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பிரதமரின் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தால் 24 பஞ்.,களில் 100 சதவீதம் குடிநீர் இணைப்பு
/
பிரதமரின் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தால் 24 பஞ்.,களில் 100 சதவீதம் குடிநீர் இணைப்பு
பிரதமரின் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தால் 24 பஞ்.,களில் 100 சதவீதம் குடிநீர் இணைப்பு
பிரதமரின் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தால் 24 பஞ்.,களில் 100 சதவீதம் குடிநீர் இணைப்பு
ADDED : ஜூலை 26, 2024 02:27 AM
கரூர்: பிரதமரின் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில், 24 பஞ்சாயத்து-களில், 100 சதவீதம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன், கிராமங்கள் தோறும் குடிநீர் தொட்-டிகள் அமைத்து, தெருக்கள் தோறும் பொது குழாய்கள் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. வசதி படைத்த வீடுகளில் தனியாக குடிநீர் குழாய் இணைப்பு இருந்தது. தெருக்களில் குழாய்களில் தண்ணீர் பிடிக்கும் போது பெண்கள் தகராறு செய்யும் சம்பவங்கள் நடந்தன. சில குழாயடி சண்டைகள் வன்-முறைகளிலும் முடிந்துள்ளன.
இந்நிலையில் கடந்த, 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி, ஜல் ஜீவன் மிஷன் என்று அழைக்கப்படும் உயிர்நீர் இயக்கம் என்ற திட்டத்தை அறிவித்தார். ஒவ்வொரு நபருக்கும் குறைந்தது, 55 லிட்டர் குடிநீராவது வழங்க வேண்டும் என்பது தான் திட்டத்தின் குறிக்கோளாக உள்ளது. இதன்படி கரூர் மாவட்டத்தில், 8 ஊராட்சி ஒன்றியங்களில், 157 பஞ்சாயத்துகளில் இரண்டு லட்-சத்து, 4,464 வீடுகள் இருந்தன. இதில், 41 ஆயிரத்து, 171 வீடுக-ளுக்கு மட்டுமே குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டு இருந்தது.
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்திற்கு பின், ஒரு லட்சத்து, 76 லட்-சத்து, 396 வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. இது, 86.27 சதவீதமாகும். 4 ஊராட்சி ஒன்றியங்களில், 24 பஞ்-சாயத்துகளில், 100 சதவீதம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கி உள்ளது. அரவக்குறிச்சி ஒன்றியம் அம்மாபட்டியில், 711 வீடுகள், எருமார்பட்டி, 344, ஈநத்தம், 1,692, இனங்க-னுாரில், 596, கொடையூர், 837, லிங்கமநாயக்கன்பட்டியில், 1,186, மொடக்கூர் கிழக்கு, 387, மொடக்கூர் மேற்கு, 519, நாகம்பள்ளி, 2,042, பெரியமஞ்சுவளி, 813, வெஞ்சமாங்கூ-டலுார் கிழக்கு, 898, வெஞ்சமாங்கூடலுார் மேற்கு, 779, ஆலம-ரத்துபட்டி, 846 வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
க.பரமத்தி ஒன்றியத்தில் ஆரியூர், 401 வீடுகள், கூடலுார் மேற்கு, 677, காருடையாம்பாளையத்தில், 708, கோடந்துார், 926, முன்னுார், 644, ராஜபுரம், 665, புத்தாம்பூர், 713, சேப்ளாப்பட்டி, 667 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம், கிராமப்புறங்களில் சத்தமின்றி மவுன புரட்சியை நடத்திக்கொண்டிருக்கிறது

