/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பஸ்சில் சென்ற தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு
/
பஸ்சில் சென்ற தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு
ADDED : செப் 15, 2024 02:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி: திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்தவர் சுந்தரராஜன், 55; இவர், தனியார் லாரி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் காலை, சுந்தரராஜன் வேலை விஷயமாக, துறையூரில் இருந்து நாமக்கல்லிற்கு பஸ்சில் புறப்பட்டார். பஸ், அலங்கா-நத்தம் பிரிவு அருகே சென்றபோது மயங்கி விழுந்துள்ளார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, அலங்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு உயிரிழந்தார். எருமப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

