/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்ட தனிப்பிரிவுக்கு 18 மாதத்துக்கு பிறகு இன்ஸ்., நியமனம்
/
கரூர் மாவட்ட தனிப்பிரிவுக்கு 18 மாதத்துக்கு பிறகு இன்ஸ்., நியமனம்
கரூர் மாவட்ட தனிப்பிரிவுக்கு 18 மாதத்துக்கு பிறகு இன்ஸ்., நியமனம்
கரூர் மாவட்ட தனிப்பிரிவுக்கு 18 மாதத்துக்கு பிறகு இன்ஸ்., நியமனம்
ADDED : மார் 20, 2024 01:43 AM
கரூர்:கரூர் மாவட்ட தனிப்பிரிவுக்கு, ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு, போலீஸ் இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த,
2022 அக்டோபர் மாதம், கரூர் மாவட்ட தனிப்பிரிவு போலீஸ்
இன்ஸ்பெக்டராக இருந்த செல்வராஜ், திருச்சி சரக காத்திருப்போர்
பட்டியலுக்கு மாற்றப்பட்டார். பிறகு, கரூர் மாவட்ட தனிப்பிரிவுக்கு
போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடம் கடந்த, ஒன்றரை ஆண்டுகளாக
நியமிக்கப்படாமல் இருந்தது.
இதனால், எஸ்.ஐ., தலைமையிலான
போலீசார், கரூர் மாவட்ட தனிப்பிரிவை கவனித்து வந்தனர். இந்நிலையில்,
எம்.பி., தேர்தல் நெருங்கும் நிலையில், கரூர் மாவட்ட தனிப்பிரிவுக்கு,
திருச்சி மாவட்டம், முசிறி-2 போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக இருந்த
பொன்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், கரூர் மகளிர் போலீஸ்
ஸ்டேஷனுக்கு, திருச்சி மாவட்டம், மணப்பாறை போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்
சுமதி, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.