/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அம்பேத்கர் நினைவு தினம்: கட்சியினர் அஞ்சலி
/
அம்பேத்கர் நினைவு தினம்: கட்சியினர் அஞ்சலி
ADDED : டிச 07, 2025 04:30 AM

கரூர்: கரூர் மாவட்ட, அ.தி.மு.க., சார்பில், அம்பேத்கரின், 69வது நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நேற்று, கட்சி அலுவலகத்தில் நடந்தது. அதில், டாக்டர் அம்பேத்கர் உருவப்படத்துக்கு, மாநில அ.தி.மு.க., அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சின்னசாமி, மலர் துாவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவர் திருவிகா, துணை செயலாளர் மல்லிகா, ஜெயலலிதா பேரவை செயலாளர் நெடுஞ்செழியன், எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் தானேஷ் குமார், பகுதி செயலாளர்கள் சக்திவேல், சுரேஷ், தினேஷ்குமார் உள்பட, பலர் பங்கேற்றனர்.
அதேபோல், பகுஜன் சமாஜ் கட்சி, த.வெ.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, புரட்சி பாரதம், பட்டியல் இன விடுதலை பேரவை, ஆதிதமிழர் முன்னேற்ற கழகம், தமிழ்புலிகள் கட்சி, உள்ளிட்ட, பல்வேறு அமைப்புகள் சார்பிலும், டாக்டர் அம்பேத்கர் உருவப்படத்துக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.* கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றியத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் மகாமுனி என்ற வன்னியரசு தலைமை வகித்தார். இதில், பாலராஜபுரம் பஞ்., வீரராக்கியம், பழைய ஜெயங்கொண்டம், ஆகிய இரண்டு இடங்களில், அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பழைய ஜெயங்கொண்டம் நகர செயலாளர் முருகேசன், வீரராக்கியம் கிளை செயலாளர் மலையாளம், மாவட்ட அமைப்பாளர்கள் லோகநாதன், அன்பரசன், பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

