ADDED : டிச 07, 2025 04:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் அருகே, வெள்ளியணை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நிறமாலை திருவிழா நடந்தது. இதில், தலைமை ஆசிரியர் தர்மலிங்கம் தலைமை வகித்தார். ஒளி நேர்கோட்டில் செல்லுதல், ஒளி எதிரொளிப்பு, ஒளிவிலகல், முப்பட்டகம் வழியே செல்லும் வெண்ணிற ஒளி விப்ஜியார் எனப்படும் ஏழு வண்ணங்களாக பிரிதல், நியூட்டன் சக்கரம், 'சிடி' ஸ்பெக்ட்ரோஸ்கோப், பெரிஸ்கோப், மாய பிம்பம் போன்ற பல்வேறு செயல்பாடுகள் காட்சிப்படுத்தப்பட்டன. மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று, ஒளி பற்றிய அறிவியலை கற்றுக்கொண்டனர்.
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி, கரூர் ஆஸ்ட்ரோ கிளப் வழிகாட்டுதல் நிறமாலை திருவிழாவிற்கான செயல்பாடுகளை ஆசிரியர்கள் மனோகர், வாசுகி, வெங்கடேசன், சசிகலா ஆகியோர் செய்திருந்தனர்.

