/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு பட்டாசு வெடித்து வரவேற்ற தி.மு.க.,

ADDED : மே 14, 2025 01:57 AM
கரூர், பொள்ளாச்சி பாலியல் வழக்கில், கைது செய்யப்பட்ட
ஒன்பது பேரும் குற்றவாளிகள் என, நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்கும் விதமாக, தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து வரவேற்றனர்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், மாக்கினாம்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்ளிட்ட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கை, சி.பி.ஐ., விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. கோவை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கு விசாரணையில், நேற்று தீர்ப்பு
அளிக்கப்பட்டது. குற்றவாளிகள் ஒன்பது பேருக்கும் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து, கரூர் பஸ் ஸ்டாண்ட் மனோகரா ரவுண்டானா அருகில், தி.மு.க., சார்பில் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று கொண்டாடினர். மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர் மகேஸ்வரி, துணை மேயர் தாரணி சரவணன், மாநகர பகுதி செயலாளர்கள் ராஜா, சுப்பிர
மணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.