அ.தி.மு.க., நிர்வாகிகளை விரைவில் சந்திக்கும் இ.பி.எஸ்.,
அ.தி.மு.க., நிர்வாகிகளை விரைவில் சந்திக்கும் இ.பி.எஸ்.,
ADDED : ஜூலை 07, 2026 05:26 AM
கரூர்; கரூர் மாவட்ட, அ.தி.மு.க., நிர்வாகிகளை, அக்கட்சி பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., விரைவில், சந்திக்க உள்ளார்.
கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளராகவும், கரூர் தொகுதி எம்.எல்.ஏ.,வுமாக இருந்தவர் விஜ-யபாஸ்கர். சட்டசபையில் த.வெ.க., அரசுக்கு ஆதரவாக ஓட்டு போட்டதால், அவரிடம் இருந்த மாவட்ட செயலாளர் பதவியை, இ.பி.எஸ்., பறித்தார். பிறகு, இ.பி.எஸ்., பக்கம் திரும்பிய விஜய பாஸ்கருக்கு, மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்படவில்லை. மாறாக, மாநில கொள்கை-பரப்பு இணை செயலாளர் பதவி மட்டும் வழங்கப்-பட்டது. இதனால், எம்.எல்.ஏ., பதவியை ராஜி-னாமா செய்த விஜயபாஸ்கர், கடந்த, 2ல் த.வெ.க.,வில் இணைந்தார். அவருடன், அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலரும் சென்றனர்.தற்போது விஜயபாஸ்கருடன் த.வெ.க., வுக்கு சென்ற நிர்வாகிகளின் பதவிகளுக்கு, புதிய பொறுப்பாளர்களை நியமிக்கும் வகையில், மாவட்ட செயலாளர் கமலகண்ணன் ஆலோ-சனை நடத்தி வருகிறார். விரைவில், கரூர் மாவட்ட அ.தி.மு.க.,வில் காலியாக உள்ள பதவி-களுக்கு, புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இதுகுறித்து நிர்வாகிகள் கூறியதாவது:
த.வெ.க.,வுக்கு சென்ற விஜயபாஸ்கருடன், ஜெ.,பேரவை செயலாளர் நெடுஞ்செழியன், இளைஞர் அணி செயலாளர் தானேஷ் குமார், கரூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் சுரேஷ், தினேஷ், சில பகுதி நிர்வாகிகள், ஒரு சில ஒன்-றிய நிர்வாகிகள் சென்று விட்டனர். இதனால், காலியாக உள்ள பதவிகளுக்கு விரைவில், புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
கரூர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கும் சூழ்நிலையில், புதிய பொறுப்பாளர்கள் நியமனம் முடிந்த பிறகு, கரூர் மாவட்டத்தில் உள்ள கிளை முதல், மாவட்ட நிர்வாகிகள் என அனைவரையும், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கரூரில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது, கரூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் குறித்து, ஆலோசனை நடத்தவும் வாய்ப்-புள்ளது.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
