UPDATED : நவ 03, 2026 07:02 AM
ADDED : நவ 03, 2026 05:53 AM

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதியில் மல்லிகை பூக்கள் கிலோ, 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகி-றது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகி-ளிப்பட்டி, உடையந்தோட்டம், செக்கணம், எழுதி-யாம்பட்டி, மாயனுார், காட்டூர், சேங்கல் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பூக்கள் சாகுபடி செய்-துள்ளனர். விரிச்சிப்பூக்கள், சின்னரோஜா, மல்-லிகை, செண்டுமல்லி ஆகியவை சாகுபடி செய்-யப்படுகிறது. கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. செடிகளில் பூக்கும் பூக்களை, கூலி தொழிலாளர்களை கொண்டு
பறிக்கப்படுகிறது.
பின்னர் பூக்கள் கரூர், திருச்சி, குளித்தலை, முசிறி ஆகிய பகுதிகளில் செயல்படும் பூ மார்க்-கெட்டுகளுக்கு கொண்டு சென்று விற்கப்படுகி-றது. சின்ன ரோஜா கிலோ, 120 ரூபாய், செண்டு-மல்லி கிலோ, 50 ரூபாய், மல்லிகை கிலோ, 450 ரூபாய், விரிச்சிப்பூக்கள் கிலோ, 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
