/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் அருகே பூட்டப்பட்ட நுாலகம் மாணவ, மாணவிகள் அதிருப்தி
/
கரூர் அருகே பூட்டப்பட்ட நுாலகம் மாணவ, மாணவிகள் அதிருப்தி
கரூர் அருகே பூட்டப்பட்ட நுாலகம் மாணவ, மாணவிகள் அதிருப்தி
கரூர் அருகே பூட்டப்பட்ட நுாலகம் மாணவ, மாணவிகள் அதிருப்தி
ADDED : ஏப் 27, 2024 09:39 AM
கரூர்: கரூர் அருகே, போலீஸ் ஸ்டேஷன் சார்பில் திறக்கப்பட்ட நுாலகம் பூட்டப்பட்டுள்ளது. இதனால், அந்த பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
கரூர் நகர போலீஸ் சப்-டிவிசனுக்குட்பட்ட வெங்கமேடு போலீஸ் ஸ்டேஷன் சார்பில், என்.எஸ்.கே., நகரில் உள்ள பழைய பள்ளி கட்டடத்தில், சில மாதங்களுக்கு முன்பு நுாலகம் திறக்கப்பட்டது. அதை அப்போதைய எஸ்.பி., சுந்தர வடிவேல் திறந்து வைத்தார்.
அதில், அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் அங்கு சென்று நாளிதழ்கள், அறிவியல், வரலாற்று புத்தகங்கள், வார பத்திரிக்கை, மாத பத்திரிக்கைகளை படித்து வந்தனர். இந்நிலையில், எந்தவித முன்னறிப்பும் இல்லாமல், நுாலகம் சில நாட்களுக்கு முன்பு, திடீரென மூடப்பட்டது.
இதனால் அப்பகுதி மக்கள், மாணவ, மாணவிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். எனவே, பூட்டப்பட்டுள்ள நுாலகத்தை, வெங்கமேடு போலீசார் நாள்தோறும் காலை, மாலை நேரங்களில் திறந்து வைக்க வேண்டியது அவசியம்.

