தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் ஜூலை 23ல் பழைய கார் ஏலம்

மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் ஜூலை 23ல் பழைய கார் ஏலம்

மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் ஜூலை 23ல் பழைய கார் ஏலம்


ADDED : ஜூலை 09, 2026 05:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2026 05:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:மாவட்ட பஞ்., அலுவலகத்தில் பழைய வாகனம் ஏலம் வரும், 23ல் நடக்கிறது என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள, மாவட்ட பஞ்., அலுவலகத்தில் வரும், 23 காலை 11:00 மணிக்கு முதிரா நிலையில் கழிவு செய்யப்பட்ட கார் பொது ஏலத்துக்கு வருகிறது. வரும், 10ல் காலை 10:00 மணி முதல் ஏலம் நடக்கும் நேரம் வரை வாகனத்தை நேரத்தில் பார்வையிடலாம்.

ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் வரும், 20 காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நுழைவு கட்டணமாக, 50 ரூபாய்- மற்றும் வைப்புத் தொகையாக, 2,000 ரூபாய்- செலுத்தி தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளவேண்டும். மேலும், ஏலம் எடுத்தவர்கள் காருக்கான ஏலத் தொகை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரியுடன் சேர்த்து வரும், 23ல் செலுத்த வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us