/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ப.வேலுாரில் ரசாயனம் மூலம் பழுக்க வைத்து மாம்பழம் விற்பனை: கண்டுக்காத அதிகாரிகள்
/
ப.வேலுாரில் ரசாயனம் மூலம் பழுக்க வைத்து மாம்பழம் விற்பனை: கண்டுக்காத அதிகாரிகள்
ப.வேலுாரில் ரசாயனம் மூலம் பழுக்க வைத்து மாம்பழம் விற்பனை: கண்டுக்காத அதிகாரிகள்
ப.வேலுாரில் ரசாயனம் மூலம் பழுக்க வைத்து மாம்பழம் விற்பனை: கண்டுக்காத அதிகாரிகள்
ADDED : ஏப் 27, 2024 09:56 AM
ப.வேலுார்: ப.வேலுாரில், 'கார்பைடு' கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. ஆனால், அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர்.
பரமத்தி வேலுார் தாலுகாவுக்கு உட்பட்ட பரமத்தி, பொத்தனுார், பாண்டமங்கலம் ஆகிய பகுதிகளிலும், குறிப்பாக ப.வேலுார் பகுதிகளில் ரசாயன கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. விற்பனைக்கு பல ரக மாம்பழங்கள், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படுகிறது. வணிக நோக்கத்திற்காக பழமாகும் முன்பே, 'கார்பைடு' கல் மூலம் மாங்காய்களை பழுக்க வைக்கின்றனர்.
சிலர், குடோன் அமைத்து டன் கணக்கில் மாங்காய்களை பழுக்க வைத்து மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இவ்வாறு பழுக்க வைக்கும் மாம்பழங்களை உண்பதன் மூலம் புற்றுநோய், இருதய பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதை உணவு பாதுகாப்புதுறையினர், டவுன் பஞ்., நிர்வாகத்தினர் கண்காணித்து தடுக்க வேண்டும். ஆனால், மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் தான் பெயரளவுக்கு சோதனை நடத்துகின்றனர். பல இடங்களில் கண்டும் காணாமல் விட்டு விடுகின்றனர்.
பெரும்பாலும், குழந்தைகள் தான் மாம்பழத்தை விரும்பி வாங்கி உண்கின்றனர். இது போன்ற மாம்பழங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, நாளை நடக்கவுள்ள ப.வேலுார் வார சந்தையில் உணவு பாதுகாப்பு துறையினர், டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் சோதனை நடத்தி, 'கார்பைடு' கல் வைத்து பழுக்க வைத்த மாம்பழங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

