ADDED : ஜூலை 04, 2026 04:47 AM
குளித்தலை:குளித்தலை
அடுத்த மருதுார் டவுன் பஞ்., ஒன்றாவது வார்டு, தேவேந்திரகுல தெருவில்
போதிய இடவசதி இல்லாமல் குடியிருப்புகள் அமைந்துள்ளன. மேலும்
அருகிலேயே, ராஜேந்திரம் பஞ்சாயத்தில், 75 குடியிருப்பு உள்ளது.
இந்த இரண்டு கிராமங்களிலும், ஒவ்வொரு குடும்பத்தாரும் தனிநபர்
கழிப்பறை கட்டிக் கொள்ள இட வசதி இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பகுதி
மக்கள், மருதுார் ரயில்வே குகைவழி பாதையின் நடைபாதை மற்றும் ரயில்
பாதையில் இயற்கை உபாதையை கழிக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. இரு
ஆண்டுகளுக்கு முன் இயற்கை உபாதை கழிக்க சென்ற, இரண்டு பெண்கள் ரயிலில்
அடிபட்டு உயிரிழந்தனர். குழந்தைகள் முதல் முதியோர் வரை
உயிரிழப்புகளை தடுக்கவும், திறந்தவெளி கழிப்பிடத்தை தவிர்க்கும்
வகையில், மருதுார் ரயில்வே குகை வழி பாதை அருகே உள்ள, பொதுப்பணித்
துறைக்கு சொந்தமான இடத்தில், சுகாதார வளாகம் அமைக்க வேண்டும் என, கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
