/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் அருகே குரங்குகளால் தொல்லை வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை
/
கரூர் அருகே குரங்குகளால் தொல்லை வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கரூர் அருகே குரங்குகளால் தொல்லை வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கரூர் அருகே குரங்குகளால் தொல்லை வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ADDED : டிச 09, 2025 04:58 AM

கரூர்: கரூர் அருகே, குரங்குகள் செய்யும் சேட்டை-களால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்-ளனர். இந்த குரங்குகளை பிடிக்காமல், வனத்-துறை அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.
கரூர் மாவட்டம், லாலாப்பேட்டை அருகே மகி-ளிப்பட்டி, உடையான் தோட்டம், புதிய தொட்டி-யப்பட்டி, எலுமிச்சை பண்ணை தோட்டம் ஆகிய கிராமங்கள் உள்ளன.
அதில், தொடக்கப்பள்ளி மற்றும் 700க்கும் மேற்-பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட, பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடவூர் வனப்பகுதிகளில் இருந்து வந்த, 20க்கும் மேற்பட்ட குரங்குகள் மகளிப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில், கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ளன.அந்த பகுதியில் உணவு பொருட்களை, வாங்கி செல்லும் பொதுமக்களிடம் இருந்து, குரங்குகள் ஆக்ரோஷம் காட்டி பறித்துக்கொண்டு ஓடி விடு-கிறது.
மேலும், ஓட்டல், டீ கடைகளிலும் குரங்குகள் கைவரிசையை காட்டி, உணவு பொருட்களை துாக்கி செல்கிறது.
இதுகுறித்து, மகிளிப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், வனத்துறை அதிகாரி களிடம் புகார் செய்துள்ளனர். ஆனால், வனத்துறை அதிகாரிகள் குரங்குகளை பிடிக்கும் வகையில், கூண்டுகள் தங்களிடம் இல்லை எனக்கூறி, அலட்சியமாக உள்ளனர்.
இதனால், மகிளிப்பட்டி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், சிறுவர், சிறுமிகளை வீட்டுக்கு வெளியே அனுப்ப முடியாமல் தவிக்கின்றனர்.
எனவே, வனத்துறை அதிகாரிகள், சேட்டை செய்யும் குரங்குகளை பிடித்து, மீண்டும் கடவூர் மலைப்பகுதியில், கொண்டு போய் விட வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

