/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை சங்கம் சார்பில் சாலை மறியல்
/
ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை சங்கம் சார்பில் சாலை மறியல்
ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை சங்கம் சார்பில் சாலை மறியல்
ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை சங்கம் சார்பில் சாலை மறியல்
ADDED : டிச 09, 2025 04:54 AM
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகம் முன், நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கத்தினர், தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; துாய்மை பணியா-ளர்களுக்கு வீடு வழங்க வேண்டும்; உயர்கல்-வியில் துப்புரவு பொறியியல் துறையை ஏற்ப-டுத்த வேண்டும்; கொரோனா காலத்தில் பணி-யாற்றியவர்களுக்கு, மூன்று மாத ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று மாநிலம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்டனர். கரூர் கலெக்டர் அலுவலகம் முன், நேற்று மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில், வெள்ளி-யணை சாலையில் மறியல் நடந்தது. அதில் ஈடு-பட்ட, 50க்கும் மேற்பட்டவர்களை தான்தோன்றி-மலை போலீசார் கைது செய்தனர்.