/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் எஸ்.ஐ.ஆர்., விழிப்புணர்வு கோலம்
/
கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் எஸ்.ஐ.ஆர்., விழிப்புணர்வு கோலம்
கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் எஸ்.ஐ.ஆர்., விழிப்புணர்வு கோலம்
கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் எஸ்.ஐ.ஆர்., விழிப்புணர்வு கோலம்
ADDED : நவ 14, 2025 02:20 AM
கரூர், நஇந்திய அரசியலமைப்பு சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, 2026 ஜன., 1ஐ தகுதி நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை, (எஸ்.ஐ.ஆர்.,) இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையொட்டி, கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளிலும், கடந்த, 4 முதல், வீடு வீடாக சென்று, வாக்காளர்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவம் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இப்பணி டிச., 4 வரை நடக்கிறது. அங்கன்வாடி பணியாளர்கள், எழுத்தர் பணியாளர்கள் (நகர்புறம்), ஒப்பந்த ஆசிரியர்கள், மதிய உணவு பணியாளர்கள், பஞ்., செயலாளர்கள், ஆசிரியர்கள், வி.ஏ.ஓ.,க்கள், கிராம அளவிலான பணியாளர்கள் இப்பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், ரங்கோலி கோலம் வரையப்பட்டது. இதை கலெக்டர் தங்கவேல்
பார்வையிட்டார்.

