மாநில இறகுப்பந்து போட்டி அரசுப்பள்ளி மாணவர் தேர்வு
மாநில இறகுப்பந்து போட்டி அரசுப்பள்ளி மாணவர் தேர்வு
ADDED : ஆக 30, 2026 06:10 AM
அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, எட்டாம் வகுப்பு மாணவர் ஹரிஷ் இளங்கோ,
குறுவட்ட போட்டியில் வெற்றி பெற்று, மாவட்ட போட்டிக்கு
தேர்வாகியுள்ளார்.
பல்வேறு குறுவட்ட மையங்களில் வெற்றி பெற்ற
மாணவர்களுக்கு, பள்ளப்பட்டியில் மாவட்ட அளவிலான போட்டி நடந்தது.
அதில் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, எட்டாம்
வகுப்பு மாணவர் ஹரிஷ் இளங்கோ, கரூர் ஒன்றிய மாணவரை வென்று, இறுதியாக
கிருஷ்ணராயபுரம் மாணவருடன் போட்டியிட்டு மாநில போட்டிக்கு தகுதி
பெற்றார்.
மாநில போட்டியில் விளையாட இருக்கும் ஹரிஷ் இளங்கோவை, கரூர்
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பெரியசாமி, உடற்கல்வி இயக்குனர்
கதிர்வேல், உடற்கல்வி ஆசிரியர் சங்கர் ஆகியோர் பாராட்டினர். பள்ளி
வழிபாட்டு கூட்டத்தில் தலைமை ஆசிரியர் சாகுல் ஹமீது பரிசு வழங்கி
ஊக்குவித்ததோடு, மாணவரின் தனித்திறனை வளர்க்கும் அவரது தந்தை
இளங்கோவையும் பாராட்டினார்.
