/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
புகையில்லா போகி கொண்டாடபர்கூரில் விழிப்புணர்வு பேரணி
/
புகையில்லா போகி கொண்டாடபர்கூரில் விழிப்புணர்வு பேரணி
புகையில்லா போகி கொண்டாடபர்கூரில் விழிப்புணர்வு பேரணி
புகையில்லா போகி கொண்டாடபர்கூரில் விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜன 12, 2025 01:05 AM
புகையில்லா போகி கொண்டாடபர்கூரில் விழிப்புணர்வு பேரணி
கிருஷ்ணகிரி, :பர்கூர் டவுன் பஞ்., சார்பில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வலியுறுத்தி, விழிப்புணர்வு பேரணி நடந்தது.
தைப்பொங்கல் விழா போகி பண்டிகையில், வீடுகளிலுள்ள பழைய பொருட்கள், பாய், உள்ளிட்ட பொருட்களை மக்கள் எரிப்பது வழக்கம். பல்வேறு இடங்களில் இதுபோல், பொருட்களை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. பொது இடங்களிலும், வீதிகளிலுள்ள காலி இடங்களிலும் பொருட்களை எரிப்பதை தவிர்க்க வேண்டும், எரிக்க பயன்படுத்தும் பொருட்களை, பர்கூர் டவுன் பஞ்., துாய்மை பணியாளர்கள், வாகனங்களில் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பர்கூர் டவுன் பஞ்., சார்பில், புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. டவுன் பஞ்., தலைவர் சந்தோஷ்குமார் பேரணியை துவக்கி வைத்தார். பர்கூர் பஸ் ஸ்டாண்ட் வழியாக டவுன் பஞ்., வார்டுகளில் சென்று, மீண்டும் பஸ் ஸ்டாண்டிலேயே நிறைவடைந்தது.
இதில், பொது இடங்களில் பொருட்களை எரித்து, சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை, டவுன் பஞ்., பணியாளர்கள், துாய்மை பணியாளர்கள் கையில் ஏந்தி சென்றனர். டவுன் பஞ்., செயல் அலுவலர் விஜயன், சுகாதார மேற்பார்வையாளர் விஜயன் மற்றும் டவுன் பஞ்., உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.