/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திநதிகள் இணைப்பு விவசாயிகள் அறப்போராட்டம்

ADDED : ஜன 31, 2025 01:11 AM
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திநதிகள் இணைப்பு விவசாயிகள் அறப்போராட்டம்
கிருஷ்ணகிரி,:தமிழக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில், கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று, காந்திய வழியில் அறப்போராட்டம் நடந்தது. மாநிலத்தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார்.
போராட்டத்தில், அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை உத்திரவாதப்படுத்தும் சட்டம் இயற்ற வேண்டும். எம்.எஸ்.சாமிநாதன் கமிஷன் அறிக்கையின்படி, பயிர் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் முழு வங்கி பயிர் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
நிலம் கையகப்படுத்தும் சட்டம், 2013ன் படி, வளர்ச்சி திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும்போது விவசாயிகளிடம் எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெற்று, 4 மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும். வளர்ச்சியடைந்த பகுதியில், 10 சதவீத வீட்டு மனைகளை, விவசாயிகள் குடும்பத்தினருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், 10,000 ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
முன்னதாக, கலைஞர்களின் சாகச விழிப்புணர்வு நிகழ்ச்சியும், மயிலாட்டமும் நடந்தது. இதில், மாநில துணைத்தலைவர் முருகன், மின்சார பிரிவு மாவட்ட தலைவர் சிவக்குமார், மேற்கு மாவட்ட தலைவர் சித்தலிங்கப்பா உள்பட பலர் பங்கேற்றனர்.