/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.22,106 கோடி மதிப்பில் வளம் சார்ந்த கடன் திட்டம்
/
ரூ.22,106 கோடி மதிப்பில் வளம் சார்ந்த கடன் திட்டம்
ரூ.22,106 கோடி மதிப்பில் வளம் சார்ந்த கடன் திட்டம்
ரூ.22,106 கோடி மதிப்பில் வளம் சார்ந்த கடன் திட்டம்
ADDED : பிப் 26, 2025 01:19 AM
ரூ.22,106 கோடி மதிப்பில் வளம் சார்ந்த கடன் திட்டம்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு, 22,106.14 கோடி ரூபாய் மதிப்பில் வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வங்கியாளர்களுக்கான மாவட்ட ஆலோசனை குழு கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்து, நடப்பாண்டின் முன்னுரிமை துறைகளுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டார்.
இது குறித்து, அவர் பேசியதாவது:நபார்டு வங்கி ஆண்டுதோறும் வளம் சார்ந்த கடன் திட்டத்தை வெளியிட்டு வருகிறது. அதன்படி, முன்னுரிமை துறைகளுக்கு நடப்பாண்டில், 22,106.14 கோடி ரூபாய் அளவுக்கு வங்கிக்கடன் அளவிடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் திட்ட அறிக்கையின் முக்கிய அம்சங்களை, நபார்டு வங்கி, மாவட்ட வளர்ச்சி மேலாளரால்
எடுத்துரைக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தின் ஊரக மற்றும் வேளாண் வளர்ச்சி பணியில் முக்கிய பங்கு வகிக்கும் நபார்டு வங்கி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற வளம் சார்ந்த தகவல்களை சேகரித்து, கடன் தொகை மதிப்பிடப்
பட்டுள்ளது.அதன்படி வேளாண்மைக்கு, 14,250.10 கோடி ரூபாய், நுண், சிறு மற்றும் குறு தொழில்களுக்கான கடன், 6,006.88 கோடி ரூபாய், பிற முன்னுரிமை துறைகளுக்கு (ஏற்றுமதி, கல்வி, வீடு கட்டுதல் மற்றும் மீள்சக்தி) 1,849.16 கோடி ரூபாய் அளவிற்கு, கடன் வழங்க மதிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) பெரியசாமி, நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் ரமேஷ், இந்தியன் வங்கி துணை மண்டல மேலாளர் பிரேந்திரகுமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சரவணன், மற்றும் வங்கி மேலாளர்கள், அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

