தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ரைஸ் மில் ஓனர் வீட்டில் 12 பவுன் நகை திருட்டு

ரைஸ் மில் ஓனர் வீட்டில் 12 பவுன் நகை திருட்டு

ரைஸ் மில் ஓனர் வீட்டில் 12 பவுன் நகை திருட்டு


ADDED : ஜூலை 07, 2026 06:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2026 06:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராயக்கோட்டை; கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை மஜித் தெருவை சேர்ந்தவர் நியாமத்துல்லா, 63. ரைஸ்மில் நடத்தி வருகிறார். மனைவியுடன், சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே பேலுாரில் உள்ள தன் மகள் ஷமா என்பவரை பார்க்க, நேற்று முன்தினம் காலை புறப்பட்டு சென்றார். இவரது மகன் ஜாவித்கான், தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று விட்டார்.

வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவில் இருந்த, 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 12 பவுன் நகை மற்றும் 12,000 ரூபாயை திருடி கொண்டு தப்பினர். நேற்று காலை வீட்டிற்கு வந்த மகன் ஜாவித்கான், பணம், நகை திருட்டு போனது கண்டு அதிர்ச்சிய-டைந்து, தந்தை நியாமத்துல்லாவிற்கு தகவல் தெரிவித்தார். அவரது புகார் படி, ராயக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us