தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/2 ஆண்டுகளாக மந்தகதியில் நடக்கும் அங்காளம்மன் கோவில் பணிகள்

2 ஆண்டுகளாக மந்தகதியில் நடக்கும் அங்காளம்மன் கோவில் பணிகள்

2 ஆண்டுகளாக மந்தகதியில் நடக்கும் அங்காளம்மன் கோவில் பணிகள்


ADDED : ஜூலை 08, 2026 04:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2026 04:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி:காவேரிப்பட்டணத்தில், 100 ஆண்டு பழமையான அங்காளம்மன் கோவில் உள்ளது. கடந்த, 50 ஆண்டுகளுக்கு முன்னரே ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், கடந்த அரை நுாற்றாண்டாக கும்பாபிஷேகம் நடத்தப்படவே இல்லை.

இக்கோவிலில் மாசி மாதம் நடக்கும் மகா சிவராத்திரி, மயானக்கொள்ளை திருவிழா மிகப்பிரபலம். இத்திருவிழாவை காண அண்டை மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து லட்சணக்கணக்கானோர் வருவர்.சிறப்பு வாய்ந்த இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த, பக்தர்கள் விடுத்த கோரிக்கையால், கடந்த, 2024ல், இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டு, பழைய கோவில் மண்டபங்கள் முற்றிலும் இடிக்கப்பட்டு, உப சன்னிதிகளுடன் கட்டுமான பணிகளும் கடந்த, 2024 அக்.,4ல் துவங்கின.

சில மாதங்கள் வரை வேகமாக நடந்த கும்பாபிஷேக பணிகள், அதன்பின் மந்தமாக நடந்து வருகிறது. கடந்த, ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல், கும்பாபிஷேக பணிகள் நடந்தும், இன்னும், 30 சதவீத பணிகள் கூட முடியவில்லை. கடந்தாண்டு மயானக்கொள்ளை திருவிழாவிற்கு தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டு, திருவிழா நடந்த நிலையில், பக்தர்கள் தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு சென்று, அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.

இது குறித்து, பக்தர்கள் கூறியதாவது:

காவேரிப்பட்டணம் அங்கா ளம்மன் பண்டிகை, மாவட்டத் தின் மிக முக்கிய பண்டிகை. அப்படிப்பட்ட திருவிழா நடக்கும் கோவிலில் கும்பாபிஷேக பணிகள், 2 ஆண்டுகளாக நடப்பது வேதனை அளிக்கிறது. கோவில் அருகிலுள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பதில் சிக்கலா, நிதி வரவில்லையா, அல்லது வேறேதும் பிரச்னையா என்பது கூட தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் அதை மக்களிடம் தெரியப்படுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு, உடனடியாக பணிகளை விரைவுபடுத்தி வரும் மயானக்கொள்ளை திருவிழாவிற்கு முன் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us