/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மறியலில் ஈடுபட்ட 35 பேர் மீது வழக்கு
/
மறியலில் ஈடுபட்ட 35 பேர் மீது வழக்கு
ADDED : ஏப் 27, 2024 06:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை : கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கதவணியில் தண்ணீர் பிரச்னை தொடர்பாக நேற்று முன்தினம், சேலம் - திருப்பத்துார் செல்லும் தேசிய நெடுஞ் சாலையில், காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கதவணி கிராம நிர்வாக அலுவலர் முருகன், ஊத்தங்கரை போலீசில் கொடுத்த புகார்படி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்டதாக, கதவணி துணைத் தலைவர் பிரபு மற்றும் குமார், சேட்டு, முருகன், சென்னப்பன், விஜயலட்சுமி உள்பட 35 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

