/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஐ.டி.ஐ., விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிகள் துவக்கம்
/
ஐ.டி.ஐ., விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிகள் துவக்கம்
ஐ.டி.ஐ., விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிகள் துவக்கம்
ஐ.டி.ஐ., விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிகள் துவக்கம்
ADDED : டிச 09, 2025 05:44 AM
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளியில், கடந்த 10 மாதங்களுக்கு மேலாக புதிய ஐ.டி.ஐ., தொடங்கப்பட்டு, அது போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.
அதற்கு தனியாக புதிய கட்டடங்கள் கட்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில், 9.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கட்டடம் கட்டவும், அதேபோல் அதே பகுதியில், இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை சார்பில், 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க, கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமார், பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் தலைமையில் நேற்று பூமி பூஜை நடந்தது.
இதில், தி.மு.க., மாவட்ட சேர்மன் மணி
மேகலை நாகராஜ், திட்ட இயக்குனர் கவிதா, போச்சம்பள்ளி தாசில்தார் அருள், அதிகாரிகள் மற்றும் தி.மு.க., ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி, சரவணன், இளையராஜா, கவுதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்