/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
புத்தக வாசிப்பை அதிகப்படுத்தி முன்னேற வேண்டும் கல்லுாரி விழாவில் மாவட்ட பதிவாளர் அறிவுறுத்தல்
/
புத்தக வாசிப்பை அதிகப்படுத்தி முன்னேற வேண்டும் கல்லுாரி விழாவில் மாவட்ட பதிவாளர் அறிவுறுத்தல்
புத்தக வாசிப்பை அதிகப்படுத்தி முன்னேற வேண்டும் கல்லுாரி விழாவில் மாவட்ட பதிவாளர் அறிவுறுத்தல்
புத்தக வாசிப்பை அதிகப்படுத்தி முன்னேற வேண்டும் கல்லுாரி விழாவில் மாவட்ட பதிவாளர் அறிவுறுத்தல்
ADDED : ஆக 29, 2025 01:08 AM
கிருஷ்ணகிரி “மாணவியர் புத்தக வாசிப்பை அதிகப்
படுத்தி, வாழ்வில் முன்னேற வேண்டும்,” என, பத்திர பதிவுத்
துறை மாவட்ட பதிவாளர் பாலசுப்ரமணியன் பேசினார்.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லுாரியில், பேரவை துவக்க விழா நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் கீதா தலைமை வகித்தார். வேதியியல் துறை தலைவர், பேராசிரியர் வள்ளி சித்ரா வரவேற்றார். பத்திர பதிவுத்துறை கிருஷ்ணகிரி மாவட்ட பதிவாளர் பாலசுப்ர
மணியன் பேசுகையில், “மாணவியரின் கல்லுாரி படிப்பு தான், எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அளவுகோலாக உள்ளது. தமிழ் இலக்கியம், புத்தக வாசிப்பு தான் என்னை வளர்த்து, இப்
பணிக்கு கொண்டு வந்தது. இன்றைய காலத்தில் பல்வேறு பிரிவுகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன. அவற்றை சரியான முறையில் தேர்ந்தெடுத்து, வேலைவாய்ப்புகளை பெற, மாணவியர் தயாராக வேண்டும். கல்லுாரி பாடங்களுடன், நாட்டு நடப்புகள், பொதுஅறிவுடன், இதர திறமைகளையும் வளர்த்து கொண்டு, வாழ்வில் முன்னேற வேண்டும்,” என்றார்.
தொடர்ந்து உயிர் வேதியியல் துறை தலைவர் சீனிவாசன், பேரவை உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தார். மாவட்ட பதிவாளர் பாலசுப்ரமணியன் பேரவை நிர்வாகிகளுக்கு பதக்கம் வழங்கினார். நிர்வாகிகள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
அதன்படி, பேரவை தலைவியாக சரணந்தி, பேரவை துணைத்தலைவியாக நந்தினி, செயலாளராக கவுசல்யா, பொருளாளராக சுஜி, மொழிபுல செயலாளர் காவ்யா, போதை பொருள் தடுப்பு செயலாளர் ஹரிணி, பகடிவதை தடுப்பு செயலாளர் ஜெயபிரியா, நுண்கலை மன்ற செயலாளர் ஷாலினி, விளையாட்டுத்துறை செயலாளர் அன்னபூரணி, வாசகர் வட்ட செயலாளர் மம்தா, வேலைவாய்ப்பு செயலாளர் ஆர்த்திகா, சுற்றுச்சூழல் செயலாளர் ஜெயதர்ஷினி, முதுகலை செயலாளராக சரண்யா ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். தொடர்ந்து மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
பேராசிரியர்கள் கல்பனா, உமா, லாவண்யா, பரமகுரு, முரளி, கவுரவ விரிவுரையாளர்கள், அலுவலர்கள் மற்றும், 2,500க்கும் மேற்பட்ட மாணவியர் கலந்து கொண்டனர்.