/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
1,578 பேருக்கு ரூ.8.44 கோடி நலத்திட்ட உதவிகள் தேர்தல் நேரத்தில் தி.மு.க., நாடகம் என குற்றச்சாட்டு
/
1,578 பேருக்கு ரூ.8.44 கோடி நலத்திட்ட உதவிகள் தேர்தல் நேரத்தில் தி.மு.க., நாடகம் என குற்றச்சாட்டு
1,578 பேருக்கு ரூ.8.44 கோடி நலத்திட்ட உதவிகள் தேர்தல் நேரத்தில் தி.மு.க., நாடகம் என குற்றச்சாட்டு
1,578 பேருக்கு ரூ.8.44 கோடி நலத்திட்ட உதவிகள் தேர்தல் நேரத்தில் தி.மு.க., நாடகம் என குற்றச்சாட்டு
ADDED : டிச 07, 2025 09:00 AM
கிருஷ்ணகிரி: அம்பேத்கர் நினைவு நாளையொட்டி கிருஷ்ணகிரியில், 1,578 பேருக்கு, 8.44 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தேர்தல் நெருங்கும் நேரத்தில் கண்துடைப்பு நாட-கத்தை, தி.மு.க., அரங்கேற்றி வருவதாக, எதிர்-கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.
தமிழக முதல்வர் ஸ்டாலின், சென்னை கோட்-டூர்புரத்தில் தாயுமானவர் திட்டம், கல்வி, சுய தொழில் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவி-களை வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாட்கோ மூலம் கட்-டப்பட்ட புதிய கட்டடங்களையும் காணொலியில் திறந்து வைத்தார். தொடர்ந்து கிருஷ்ணகிரியில், ஆதிதிராவிடர், பழங்குடியினர்,
பிற்படுத்தப்-பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில், 1,578 பேருக்கு, 8.44 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட
உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பர்கூர் மதியழகன், ஓசூர் பிரகாஷ் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினர்.
இது குறித்து, அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., நிர்வா-கிகள் கூறுகையில், 'தேர்தல் நேரம் நெருங்கு-வதால், தி.மு.க., தொடர் கண்துடைப்பு நாட-கத்தை அரங்கேற்றி வருகிறது. தி.மு.க., ஆட்-சியில்
பல்வேறு துறைகள் முடங்கி உள்ளன. மாங்காய் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை அடைந்துள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை. ஆதிதிராவிடர்களுக்கு என
வழங்கப்பட்ட நிலங்கள், பலருக்கு வழங்கப்பட-வில்லை. பல இடங்களில் சிலரால் அபகரிக்கப்-பட்டுள்ளன.
இதற்கு முறையான நடவடிக்கை இல்லை. இந்நி-லையில், 1,578 பேருக்கு, 8.44 கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்கள் என்ற பெயரிலும், ஏற்க-னவே கடன் வழங்கப்பட்ட பயனாளிகளுக்கு
மீண்டும் கடன் வழங்கியும் உள்ளனர். இது-போன்ற செயல்களால் மக்கள், தி.மு.க., ஆட்-சியை நன்கு புரிந்து கொண்டுள்ளனர்' என்றனர்.

